வாகன இறக்குமதி குறித்து அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!!

வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து பல காரணிகளை கவனமாக பரிசீலித்த பின்னரே தீர்மானிக்க வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பாக தேசிய பொருளாதார மற்றும் பௌதிக திட்டங்கள் தொடர்பான துறை சார் மேற்பார்வை குழுவின் சமீபத்திய கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் பல காரணிகளை கருத்தில்கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன எனவும், அந்நிய செலவாணி நெருக்கடி காரணமாக சுமார் 4000 பொருள்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், 3000 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏறக்குறைய 900 பொருட்களுக்கு மட்டுமே தற்போது இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள, நிலையில் தன்னிச்சையான முடிவுகளை மேற்க்கொள்ள முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அனைத்து முன்மொழிவுகளும் பரிந்துரைகளும் பரிசீலிக்கப்பட்டு, இலங்கை மத்திய வங்கியின் தீர்மானத்தின் அடிப்படையில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

“வாகன இறக்குமதி கட்டுப்பாடு சிலருக்கு ஏற்படுத்திய தாக்கம் குறித்து எங்களுக்கு புரிந்துணர்வு இருந்தாலும், ஒரு துறையின் நலன்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க முடியாது.

தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதிக திட்டங்கள் தொடர்பாக துறை சார் மேற்பார்வை குழுவின் போது அதிகாரிகள் பரிந்துரைத்தபடி, கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கையை இலங்கை எட்டாததால், கடன் வரியின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வதில் தடைகள் ஏற்படும்” என்றார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *