முடிவிற்கு வரும் வாகனதாரர்களுக்கு கொடுக்கப்படட கால அவகாசம்!!
நாட்டில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் காலாவதியான போக்குவரத்து அபராத கட்டணங்களைச் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இம்மாதம் 14ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.
அதன்படி,
ஒக்டோபர் 31ஆம் திததி தொடக்கம் போக்குவரத்து குற்றங்களுக்காக வழங்கப்படும் அபராத பற்றுச்சீட்டுக்கான மேலதிக அபராதக் கட்டணம் எதிர்வரும் 14ஆம் திகதி வரை அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து 28 நாட்கள் வரை மேலதிக அபராத கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.