விருந்தில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிய போது ஏற்பட்ட கோர விபத்து! இருவர் பலி
வேகக்கட்டுப்பாட்டையிழந்த கப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்
இந்தச் சம்பவம் நெல்லியடி மக்கள் வங்கிக்கு முன்பாக நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றது என நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் கரவெட்டி – வதிரியைச் சேர்ந்த பேர்னாட் கரன் (வயது – 41) மற்றும் அவரது நண்பன் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
வல்லையில் விடுதி ஒன்றில் நடந்த விருந்து ஒன்றில் கலந்து விட்டு திரும்பிச் செல்லும் வேளையிலே குழுவினர் விபத்தில் சிக்கியுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் உயிரிழந்தவரின் சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.