மனைவியின் தலைய வெட்டி கையில் கொண்டு வந்த கணவன்!!
ஈரானில் தனது மனைவியின் தலையை துண்டித்து அதனை வீதியில் கொண்டுசென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தனது இளம் மனைவியை வெட்டிக்கொன்ற கணவனின் செயல் ஈரானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஈரானின் தென்மேற்கு நகரமான அஹ்வாஸில், 17 வயதுடைய மோனா ஹெய்டாரி என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
அவரது கணவர் மற்றும் மைத்துனரால் குறித்த பெண் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு மூன்று வயது மகன் உள்ளதாகவும், இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.