மனைவியை அடித்து கொன்றுவிட்டு….. தானும் துக்கிட்டு உயிரை மாய்த்த கணவன்!!
களுத்துறை மாவட்டம் அளுத்கம – தன்வத்தகொட பகுதியில் மனைவியை அடித்துக் கொன்றவர் அதே வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம்(04/11/2023) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மனைவியின் தலையில் கணவன் அடித்துள்ளார்.
இதனால்,
பலத்த காயம் அடைந்த மனைவி கீழே விழுந்ததையடுத்து
கணவர் வீட்டின் முன் அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக தெரியவருகிறது.
மேலும்,
விசாரணையில் இருவரும் நீண்ட நாட்களாக பல்வேறு காரணங்களால் முரண்பட்டு வந்துள்ளமை தெரியவந்ததுள்ளது.
குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக Ambulance வண்டி வந்தபோதிலும் அவர் உயிரிழந்தமை தெரிந்து கொண்ட ஊழியர்கள் சடலத்தை எடுக்காமல் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அளுத்கம காவல்துறையினர், களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.