யாழில் கைதானவர்களுடன் தொடர்பு -புதுக்குடியிருப்பிலும் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நால்வருடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் வள்ளிபுனம் புதுக்குடியிருப்பு விலாசத்தை சேர்ந்த 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் புனர்வாழ்வில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இன்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.