யாழ். பல்கலை மாணவன் உட்பட வடக்கில் 13 பேருக்கு கொரோனா
வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கின் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர்,
இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 248 பேரின் மாதிரிகளும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 410 பேரின் மாதிரிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இவர்களில் 13 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவற்றுள் யாழ். மாவட்டத்தில் 8 பேரும், வவுனியா மாவட்டத்தில் 5 பேரும் உள்ளடங்குகின்றனர்.