யாழ். சிறைச்சாலை கைதி உட்பட வடக்கில் அறுவருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 442 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் 8 பேர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவருடைய வீட்டில் திருகோணமலையிலிருந்து வருகை தந்த உறவினர்கள் தங்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

அவர்கள் திருகோணமலை திரும்பிய நிலையில் அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் உள்ளவர்களிடம் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி ஆடைத் தொழிற்சாலை பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் கொழும்பு சென்று திரும்பியவர்கள்

மல்லாவி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் கரைச்சி ஆடைத் தொழிற்சாலையில் கண்டறியப்பட்ட பணியாளருடன் நேரடித் தொடர்புடையவர்” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *