யாழில் சாதனையாளர்களை சந்தித்த அதிபர் ரணில்!!
வடமாகாணத்தில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றையதினம்(07) நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அதிபர் சாதித்தவர்களை சந்தித்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் சாதித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பளுதூக்கல் வீரன் புசாந்தன், கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி அக்செயா அனந்தசயனன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை மாணவி ஜெரால்ட் அமல்ராஜ் வனிஷ்கா, வாகனத்தை தாடியால் இழுத்து சாதனை புரிந்த செல்லையா திருச்செல்வம் உள்ளிட்ட பலரையும் அதிபர் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.
அதன்போது, கல்வி, விளையாட்டு, நாடகம் மற்றும் திரைப்படக் கலை, சமூக ஊடகங்கள் போன்ற பல துறைகளில் திறமை செலுத்தியோர் கலந்துகொண்டதோடு அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட அதிபர் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.