யாழின் முக்கிய பகுதிகள் முடக்கம்! எடுக்கப்பட்டது அவசர முடிவு

யாழ். மாநகரின் மத்திய பகுதியை முடக்குவதற்கு இன்றையதினம் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் இன்றையதினம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களாவன,

யாழ். மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் – கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படும்.

கே.கே.எஸ் வீதி சத்திரச்சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் மூடப்படும்.

யாழ். மாநகரில் பாடசாலைகளில் தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகள் மட்டும் 10 நாட்களுக்கு இடைநிறுத்தப்படுகிறது.

மேலும் யாழ். மாவட்டத்தில் மண்டபங்களில் திருமண நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுகின்றன. வீடுகளில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியுடன் வீடுகளில் நடத்த அனுமதிக்கப்படும்.

உயிரிழந்தோரின் இறுதிக் கிரிகைகளுக்கு 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர்.

அத்துடன், யாழ். மாநகரின் மத்திய பகுதி முடக்கப்பட்டு பேருந்து நிலையங்கள் கோட்டைப் பகுதிக்கு மாற்றப்படுவதுடன், வர்த்தக நிலையங்களும் மூடப்படுகின்றன.

யாழ் நகரப்பகுதியில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதிகள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *