கதிர், நரேன், நட்டி இணைந்து மிரட்டும் யூகி!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக இருக்கும் கதிர், நரேன், நட்டி ஆகியோர் இணைந்து புதிய படத்தில் நடித்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும் புதிய படம் ‘யூகி’. இப்படத்தில் கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள். தென்னிந்திய நடசத்திர நடிகர்களான, பிரதாப் போத்தன், ஜான் விஜய், முனீஷ் காந்த், சினில் சைனுதீன், வினோதினி, அஞ்சலி ராவ் மற்றும் பிந்து சஞ்சீவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பன்மொழிகளில் தயாராகும் இப்படம் கோவிட் பொது முடக்க காலத்தில், அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் முறையாக கடைப்பிடித்து, சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படமாக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.