உலகவங்கி இலங்கை நிலவரம் தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!!
தாங்க முடியாத கடன் மற்றும் கொடுப்பனவு சமநிலை சவால்களை இலங்கை எதிர்கொண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
நிதி மற்றும் வெளிநாட்டு ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு மிகவும் நிச்சயமற்றதாக உள்ளதாகவும் உலக வங்கி கூறுகிறது.
உயர்மட்ட கடன் மற்றும் கடன் சேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும், வெளிப்புற ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தணிப்பதற்கும் அவசரக் கொள்கை நடவடிக்கை தேவை என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
உலக வங்கி ஆண்டுக்கு இருமுறை வெளியிடும் அறிக்கையில்
பிராந்திய நிலவரத்தை மேம்படுத்தும் வகையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் உள்ள நாடுகள் ஏற்கனவே பொருட்களின் விலை உயர்வு, விநியோக பற்றாக்குறை ஆகியவற்றால் போராடி வருகின்றன.
மாலைதீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் Faris Haddad-Servos இது தொடர்பாக தெரிவிக்கையில்
“இலங்கையின் நிச்சயமற்ற பொருளாதாரக் கண்ணோட்டம் மற்றும் மக்கள் மீதான அதன் தாக்கம் குறித்து உலக வங்கி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள ஏழை மற்றும் நலிவடைந்த குடும்பங்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கு தாங்கள் செயற்பட்டு வருவதாகவும்
இலங்கை மக்களின் நல்வாழ்விற்கு கூட்டு நடவடிக்கை தேவை எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு (2022) இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2.4 சதவீதமாக குறையும் என்றும் உலக வங்கி கணித்துள்ள எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.