திருகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் மூவர், தமது கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் இன்று (28/10/2026) இடம்பெற்றுள்ளது.

கைக்குண்டுகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும்,

48 மணித்தியால விசாரணைகளின் பின்னர் இன்று திருகோணமலை நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது,

ஐந்து சந்தேகநபர்களில் மூவர் நீதிமன்றத்திற்குள் திடீரெனத் தமது கழுத்தை அறுத்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த மூவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தினால் நீதிமன்ற வளாகத்தில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.