இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க திடீர் உடல்நலக் குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பில், ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், உறுதிப்படுத்தப்படாத இத்தகைய தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும் ஜனாதிபதி அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தொடர்பான செய்திகள் உட்பட முக்கியமான தகவல்களைச் சமூக ஊடகங்களில் பகிர்வதற்கு முன்னர், அவற்றின் உண்மைத்தன்மையை உத்தியோகபூர்வ தகவல் மூலங்கள் ஊடாக உறுதிப்படுத்துமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொய்யான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில், செய்திகளைச் சரிபார்த்த பின்னரே பகிருமாறு ஜனாதிபதி அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பான “President’s Media Division” இன் பதிவினை பார்வையிட இங்கே அழுத்துங்கள்….!!