யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (01/11/2026) அளவெட்டி அலுக்கை சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞரும், 24 வயதுடைய இளைஞரும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகப் பயணித்துள்ளனர்.
இதன்போது,

அளவெட்டி அலுக்கை சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் இருந்த மின்கம்பத்துடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
