தமிழ் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் கருப்பு. வெளியான முதல் நாளிலிருந்தே நல்ல விமர்சனங்களையும், குடும்ப ரசிகர்களின் ஆதரவையும் பெற்ற இப்படம் தற்போது புதிய வசூல் சாதனையை படைத்துள்ளது. வெறும் 6 நாட்களிலேயே உலகளவில் ரூ.200 கோடியைத் தாண்டி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கடவுள் நம்பிக்கை, ஆக்க்ஷன், உணர்ச்சி மற்றும் சமூக பின்னணியை ஒருங்கிணைத்த கதைக்களம் இந்த திரைப்படத்தின் முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கிராமத்து சூழல், கிராமத்து காவல் தெய்வம் வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் ரசிகர்களை ஈர்க்கும் திரைக்கதை ஆகியவை படத்திற்கு பெரிய ஆதரவாக அமைந்துள்ளன. இளைஞர்கள் மட்டுமல்லாமல் குடும்ப ரசிகர்களும் திரையரங்குகளுக்கு வரத் தொடங்கியிருப்பது வசூல் உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்பு, சாய் அபயங்கரின் பின்னணி இசை மற்றும் சண்டைக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் படம் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருவது கூடுதல் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வார இறுதி நாட்களில் பல திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ரசிகர்கள் முன்பதிவு மூலம் டிக்கெட்டுகளை விரைவாக பதிவு செய்ததால் பல இடங்களில் ஹவுஸ்சூஃபுல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

திரையுலக வட்டாரங்கள் தெரிவிப்பதாவது, தற்போதைய வரவேற்பு தொடர்ந்தால் படம் விரைவில் மேலும் பெரிய வசூல் சாதனைகளை எட்டும் வாய்ப்பு இருப்பதாகும். இதன் மூலம் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் கருப்பு முக்கிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் தவறவிட்டவை